நாம் உயிர்வாழ தகுதியற்றவர்களா? முன்னாள் பெண் போராளி

srifm | 03:33 | 0 comments

நகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் திருமணம் முடித்து வாழ்வளித்திருக்கிறார்.

எனது மனைவி 17 வருடங்களாக போராட்டத்தில் இணைத்திருந்து இறுதியில் ஒரு கையை இழந்த நிலையிலும் வவுனியா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சில வருடங்கள் பூஸா சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.
தனியாக ஒரு பெண் இங்கு பல தொந்தரவுகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு இச் சமூகத்தில் வாழ்வதென்பது எவ்வளவு பெரும் அவலம். எல்லாவற்றையும் தாண்டி தனக்கு துணை ஒன்று தேடாமல் எனக்கு துணையாக வாழ்க்கைப்பட்டு எனக்கு பார்வை அளித்துள்ளார்.

நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக்கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த பொருளாதார வளமுமின்றி நாம் அன்றாடம் செத்து செத்து பிளைத்துக்கொன்டிருக்கிறோம்.

நாம் உயிர்வாழ தகுதியற்றவர்களா என்று எண்ணி மனமுடைந்திருந்த நிலையில் இன்று இறுதியாக வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளாகிய உங்களிடம் உதவிகேட்டு நிற்கின்றோம். தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு செய்து எமது உயிர்வாழும் உரிமையை பெற்றுக்கொடுங்கள்.

இப்படிக்கு
தங்களின் உதவியை நாடிநிற்கும்
திரு நகுலேஸ்வரன்
முள்ளிவாய்க்கால்
தொலைபேசி : 0094 77 595 72 45

Mrs. Naguleswaran Arulmeera
National Savings Bank
Account No.: 101300104124
Mullaitivu
Sri Lanka

உதவி செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

srifm | 13:07 | 0 comments
 தமிழீழ விடுதலை புலிகளின் முன்னால் பெண் போராளி ஒருவர் போராட்டத்தில் தன் காலை இழந்த நிலையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார்.தயவுசெய்து இவரின் இந்நிலையை மாற்ற புலம் பெயர்ந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் இவரோடு தொடர்பு கொண்டு உதவி செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.தொடர்புகளுக்கு
0094773256776

யுத்தத்தின் கொடூரம் உணவிற்கே வழியில்லை சிகிச்சை மட்டும் எதற்கு? (மனதை உழுக்கும் காணொளி)

srifm | 02:24 | 0 comments

நாட்டுக்காக மூவரை பலி கொடுத்து இன்று கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி!

srifm | 02:15 | 0 comments
image

யுத்தத்தின் கோர தாண்டவத்தில் தனது தாய், தந்தை, தங்கை, தம்பி, தங்கையின் கணவர் என்போரை இழந்து தனது காது கேளாத தங்கையுடனும் இயழமையில் உள்ள தனது தம்பியுடன் போரின் வடுவை சுமந்து தவிக்கும் முன்னாள் போராளி.
தனது குடும்பத்தில் ஐந்து பேரை போரினால் இழந்ததோடு நெஞ்சிலும், தலைப்பகுதியிலும் சன்னங்களைத் தாங்கி உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் கஞ்சிக்கு கூட வழியின்றித் தவிக்கும் அவலம்.
உதவும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0094770238036
வங்கி கணக்கு இலக்கம்; சின்னராசா சிவகுமார்
70147056 இலங்கை வங்கி

யுத்ததின் வடுக்களோடு காணாமல் போன தம்பியை எண்ணி தனிமையில் வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் முன்னாள் பெண்போராளி (காணொளி இணைப்பு)

srifm | 02:12 | 0 comments
36

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடது கை, கால். வாய், வலது கண் என்பன பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்திற்கு போராடும் அவலம்.
இறுதி யுத்தத்தின் ரணங்கள் தாங்கி காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பி இருந்தால் தாங்கள் நன்றாக இருந்திருப்போம் என வருந்தி தனது வயதான தாயுடன் தினசரி கஷ்ரங்களை அனுபவிக்கும் பரிதாப நிலையில் எம் உறவுகளின் உதவிஎன்றாளும் கிடைக்குமா என எதிர்பார்த்து நிற்கும் சகோதரி.
உதவும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்;
வங்கி கணக்கு இலக்கம்; தர்மலிங்கம் தங்கேஸ்வரி
70846041
இலங்கை வங்கி


புலம்பெயர் உறவுகளே ஒன்றுசேருங்கள் உதவுவோம் நம் உறவுகளுக்கு.

Name

Email *

Message *

 
Copyright © 2011. Uthavum Karam - All Rights Reserved
Created by SRi Published by Eelanila